Pages

Saturday, October 9, 2010

வறுமையில் உழலும், இருக்கும் இடம் தெரியாத இன்னொரு இலக்கியவாதி தோழர் தேனி செ. சு. வாசி எழுதிய கவிதைகளில் சில.

"அடங்கா மனம்" தொகுப்பிலிருந்து...

தேச துரோகிகள்
--------------

வேட்பாளர்கள் வீதி வீதியாக
கையோசை எழுப்பும்
கூட்டங்களுடன் - வாக்கு
சேகரிக்கும் அன்றே
வெற்றியின் யுக்திகளை
வழிவகை செய்கிறார்கள்
விலை நிர்ணயிக்க முடியாத
சொத்துக்களை, குடும்ப
அட்டை அடகும் வைக்கும்
வழக்கத்தில் உள்ளவர்கள்
மக்களின் பிரதிநிதிகளாக
வெற்றியடைய முயற்சிப்போரிடம்
மறைமுக கையூட்டு
கரன்சிகளை பெற்று
தங்கள் வாழ்விட சொத்துக்களை;
அதிகபட்சம் ஐந்தாண்டுகளுக்கு
கேள்வியுரிமைகளையும்
வசதிவாய்ப்புகளையும்
அன்றாட தின கூலி தொகைக்காக
அன்பளிப்பும் பெற்று
வாக்களித்த மக்கள்;
அதுசரியில்லை இதுசரியில்லைஎன
குறை கூறுகிறார்கள்.
தேசிய சட்டத்தின்
முதல் குற்றவாளிகள்
மக்களே !!!!

***

கானல் நிலம்
------------

காணி நிலத்தில்
களைஎடுத்து
சேற்றில் உழுதுளப்பி
வீரியம் நிறைந்த
விதை விதைத்து
பயிராக பாடுபட்டு
வெயிலில் வெந்து
வந்துள்ளோம்....
எனக்கும் அவனுக்கும்
இடைத்தரகன் - நீ
எள்ளளளவு போதுமென்று
நெல்அளவை தேடுகின்றாய்
மடை கட்டி
மருகா வெட்டி
பகல் இரவெல்லாம்
நீர் பாய்ச்சி
நெஞ்சுரம்
நிறைந்ததைய்யா
....
இது தானா விலை?

***